Pages


running letters

drums sivam

mGinger

Showing posts with label tamil mozhi sirapugal. Show all posts
Showing posts with label tamil mozhi sirapugal. Show all posts

Sunday, 14 August 2011

தமிழ்மொழியின் சிறப்புகள்


தமிழ்மொழியின் சிறப்புகள்


தமிழால் வளர்ந்தேன் - தாய்மொழி தமிழின் சிறப்புகள்

இன்று உலக தாய்மொழி தினம் .என் தாயின் மொழி செம்மொழி   தமிழால் வளர்ந்தேன் .என் தாயின் மொழியின் பெருமை கூறுவது என் தாயின் பெருமை கூறுவது போலாகும் .

தமிழின்  சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள் ,வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும்  உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான் .

தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை ,எளிமை ,நீர்மை என்பதாகும் .

தமிழில் பகுபதம் ,பகாப்பதம் என இரண்டு வகை உண்டு .அவை  பிரித்துப்பார்க்க வேண்டியவை ,பிரித்துப்பார்க்க கூடாதவையாகும் . 

உதாரணமாக கடவுள்(கட + உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல . நீ ஆசைகளை ,பந்த பாசங்கள்  எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும் .

எண்கள் என்றால் அரேபியர்களை தான் கூறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்று தெரியவில்லை .கேட்டால் இந்தியர்களிடம் இருந்து வந்தது என்கின்றனர் .வட இந்தியனை கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது .இந்திய அரேபிய குழப்பத்தில் இருக்கும் எண்களை தமிழ் கல்வெட்டுகளில்  பாருங்கள் .உங்களுக்கே புரியும் .


இது சிறிய அளவின்  பிரிவுகள் .

1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

இந்த இம்மியளவும் அசையாது என்று நம்  பேச்சு  வழக்கில்  பேசும் சொல்.

தமிழை அழகு தமிழ் ,இசைத்தமிழ் ,அமுதத்தமிழ் என மேலும் பல பெயர்கள் உண்டு .பட்டியலை பார்க்க 

தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதொடு மட்டும்மல்லாது அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது .இது மொழியியலார்களின் ஆராய்ச்சி முடிவு .

உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம் .ஆனால் தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும்  முடியாது . 

ஏன் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை கூட சரியாக மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த தமிழால் மட்டுமே முடியும் .

உதாரணமாக ஆங்கிலம் மற்ற மொழிகளை கடன் வாங்கி வளர்ந்ததால் அதன் சொல் உச்சரிப்புக்கும் எழுத்து உச்சரிப்புக்கும் சம்மந்தமே இருக்காது  .

தமிழில் அன்பை இப்படி பிரிக்கலாம் . அ + ன்+ பு(ப் +உ) இந்த எழுத்துக்களை தனித்தனியே எப்படி உச்சரித்தாலும் அதே  சொல் தான் . LOVE உச்சரித்தால் எல்ஒவிஇ என்று தான் வரும் . 

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள்  எனலாம் . அதிலும் ழ உலகமொழிகளில் பிரெஞ்சில் மட்டும் தான் காணப்படுகிறது . (நற்றமிழ் இலக்கணம்:டாக்டர் சொ.பரமசிவம்).தமிழுக்கே சிறப்பான ழகரம் உச்சரிப்புக்கள் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறார்கள் என்பது தான் கவலை . உச்சரித்து பாருங்கள் .அல்லது பாடி பாருங்கள் அதன் இனிமை உணர்வீர்கள் . 

டாக்டர்  கால்ர்டு வேல் போப் என்பவர்கள் தமிழை கற்று திருக்குறள் ,திருவாசகத்தை மொழிபெயர்த்தவர்கள் ஆவார்கள் .கலப்பில்லாத தூய தமிழ் என போப் தான் இறந்த பிறகு கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என பொறிக்க சொன்னார் .

முக்கியமாக இந்த "கற்க்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க்க அதற்க்கு தக "எனும் குரல் கிட்டத்தட்ட 3000 வருடங்கள் முன் எழுதியது . இது இப்போது படித்தாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கும் .

3000 வருடங்களுக்கு முன்னர் இப்படி தமிழில் எழுதும் அளவுக்கு (இரண்டு வரியில் இவ்வவளவு அர்த்தம் ) மொழி அப்போதே வளர்ச்சி அடைந்திருக்கிறது  என்றால் அது எவ்வளவு காலத்திற்கு முதல் தோன்றியிருக்க வேண்டும் என சிந்தித்து பாருங்கள் . 

சீனன் சீன மொழியில் பேசினான் சீனா வளர்ந்தது , பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்சு  மொழியில் பேசினான் பிரான்ஸ் வளர்ந்தது. தமிழன் ஆங்கிலத்தில் பேசினான் அமெரிக்கா  வளர்ந்தது .

முக்கியமாக சீனாவின் துயரம் மஞ்சள் நதி ,இந்தியாவின் துயரம் பிராமணர்கள் என்று புதுதாக சேர்த்துள்ளனர் சிலர் அதே போல....

தமிழர்களின்/தமிழின் துயரம்:- 
அரசியல் 
சினிமா 
மதம்/ஜாதி    

மேலே உள்ள தமிழ் மொழியின் சிறப்புகள் நம் முன்னோர்கள் புத்திசாலிகள் என்பதை காட்டுகிறது .ஆனால் நாம் ? 
"யாதும்  ஊரே யாவரும்  கேளிர்" என்ற உலக பொது நியதியை கொண்ட ஒரே மொழி இத்தகைய தமிழில் பிறந்து தமிழால் வளர்ந்ததை நினைத்து பெருமை கொள்வோம் 


உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.

தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
- ஞா.தேவநேயப் பாவாணர்

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.

அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.

மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.

‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்

‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.

தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.

பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

“தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. எனவே தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க இயலாதது; முடியாதது.

தொன்மை மொழிகளான இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகியன பேச்சு வழக்கிழந்து ஏட்டளவில் மட்டுமே வாழ்கிறது. சமஸ்கிருதமோ ஏட்டளவிலும் குறைந்த எண்ணிக்கையினர் பேசுகின்ற கோயில் மொழியாக இருக்கின்றது. கடினமான மொழியான சீனம் ஒரே எழுத்துரு கொண்டிருப்பினும் பல்வேறு கிளைமொழிகளாகப் பிரிந்து விட்டது.

தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
“ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”

“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
“ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.


தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.
“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
பாரதிதாசன்,
“ தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”

என்று நெஞ்சார நெகிழ்கிறார்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பத்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான் பத்திச் சொற்களும், பத்தி பாடல்கல்ளும் அதிகம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்

funny

ngobikannan

ngobikannan

ngobikannan