Pages


running letters

drums sivam

mGinger

Sunday 14 August 2011

இமய மலை





கடந்த சில வருடங்களாக "இடற்மேற்கொண்டாலும் இன்னல்கள் பல வந்தாலும் இறைவனை காணும் பணிமேற்கொள்வோம்" என்று செல்லும் அனைவருக்கும் ஒரு ஏமாற்றம். ஆம் திருவுருவம் தலை சிறுத்தும் தனை மறைத்தும் தன்னை கான வரும் பக்தர்கள் தனை ஏமாற்றி விட்டார்.

இருப்பினும் பக்தர்கள் இறைவனை மறவாமல் "ஆயிரம் இடற்வந்தாலும் உன்னை கண்டு இப்பிறவியின் பயனை அடைவோம்" என கால் கடுக்க பனி மலையேறி வந்த வண்ண மிருக்க தொண்டருள் உள்ளத்து உறையும் இறைவனவன் இளகி விட்டான். தன்னுடைய விஸ்வரூபத்தை சுமார் 70 ஆண்டுகள் கழித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பனிநாதனாகி நிற்கின்றான்.

ஆம் அமர்நாத் பனிலிங்கம் சில ஆண்டுகளாகவே விவாதத்திற்குட்பட்ட பொருளாகிவிட்டது. 1999 க்கு பிறகு பல பக்தர்களுக்கு சரளைக்கல் மேடாக காட்சி யளித்தான். கடந்த வருடம் பெரும் சர்ச்சை பொருளாகிவிட்டான். அமர்நாத் குகை பனி லிங்க கோவில் நிர்வாகம் பக்தர்களை ஏமாற்ற கார்பன் டை ஆக்ஸைடு பனிகட்டியை லிங்கமாக வைத்து ஏமாற்றியது எனவும் செய்திகள் வந்தன.

மேலும் தீவிரவாதிகளில் அச்சுருத்தல் வேறு 2000மற்றும் அதன் பிறகு வந்த‌ வருடங்களில் தீவிரவாதியின் தாக்குதல்களில் 3 டசன் பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் லிங்கம் விரைவில் கரைவதற்கும் சில வருடங்கள் தோன்றாமல் போவதற்கும் சில காரணங்கள் பரவியது. அதிக பக்தர் வருகைவாசனை பக்தி பொருள்கள் அதிகம் வைத்தல்புவியின் வெப்பம் அதிகமாகுதல்எலிகாப்டர் அடிக்கடி அங்கு வர அதன் அதிர்வில் லிங்கம் உருவாகாமல் போதல் என பல யூகங்கள்

இம்முறை அத்தனை யூகங்களுக்கும் அடிமுடிகாண அசுதோசன் அயர்ந்துவிடவில்லை எப்பொழுதுமில்லாமல் இம்முறை 12 அடிக்கு உயர்ந்து அதற்க்கும் மேலாக உயர்ந்து நிற்க்கின்றான். அப்பழுக்கில்லா அம்மையப்பன்.

சுமார் 70 வருடங்களுக்கு முன்பு சண்டிகரை சேர்ந்த ஒரு பக்தர் எடுத்த புகைப்படத்தில் கடைசியாக இந்த விஸ்வரூபத்தில் பக்தர்களுக்கும் காட்சியளித்தான். அந்த வருடத்தில் உலக போர் நின்றது. ஐக்கிய நாடுகள் சபை உதித்தது.


இம்முறை அதைவிட பெரிதாக விஸ்வரூபமெடுத்துள்ளார்விஸ்வேஸ்வரன் இம்முறை உலகிற்க்கு என்ன சொல்ல வருகிறான். மீண்டும் அமைதியிழந்த உலகிற்கு அதர்மத்தை ஓட்டி ஆட்சி செய்யபோகும் குறிக்கொள் கொண்டு வந்துள்ளானா இந்த கேள்வி உலகின் அமைதிக்காக இறைவனை வேண்டும் நல்ல உள்ளங்கள் பலவற்றில் எழும் ஒரு கேள்வி இதற்க்கு காலதேவன் பதில் சொல்வான்.

ஆம் வரும் 18 ஆம் திகதி முதல் புனித அமர்நாத் குகைக்கொவில் பனிலிங்க தரிசனம் ஆரம்பிக்க உள்ளது.

தீவிரவாதிகளின் அச்சுருத்தல்களின் காரணமாக பலத்த காவல் ஏற்ப்பாடு சுமார் 32 பட்டாலியன் இராணுவ‌ துருப்புக்களுடன் எல்லை காவல் படை,இராணுவ போலீஸ்இவர்களுடன் ஜம்மு மாநில போலீஸாரும் பக்தர்களின் துணை நிற்க "பம் பம் போல" "ஹர் ஹ்ர் மகாதேவ்" என்ற கோசங்கள் மலைமுழுவதும் எழும்ப தொண்டருக்கு தொண்டராக விளங்கும் இமயவரம்பனை காண புற‌ப்பட்டு விட்டார்கள் பக்தர்கள்.

இவ்வருடம் சுமார் இரண்டு இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என கணிக்க பட்டுள்ளதாக ஜம்மு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

கயிலை நாதனின் இருப்பிடம் இமயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் பள்ளத்தாக்கும் அதில் வழிந்து வரும் நீரோடைகளும் மகேஸ்வரனின் தாண்டவத்தில் பரந்து திகளும் சடாமுடியும் அதன் அதிர்வில் பொங்கும் கங்கையும் தான் அந்த காட்சியை காணும் போது நமது கண்களில் தெரிகிறது.

இமய மலையின் ஆரம்ப அடுக்குகளின் இதய பகுதியில் அமைந்துள்ளது அமர் நாத் பனிலிங்க குகைக்கோவில் இங்கு செல்ல இரயில் விமாணம் மூலம் டில்லி வந்தடைந்துஅங்கிருந்து ஜம்மு வரலாம்.





நேரிடையாக ஜம்முவிற்க்கு இரயிலின் மூலமும் செல்லாம். திரு நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரமுள்ள பாகல் காவ்( பைதல் காவ் என்று போருள் மருவி பாகல் காவ் என்றாகிவிட்டது) பைதல் என்றால் இந்தியில் நடைபயணம் என்று பொருள். முன்பு இங்கிருந்துதான் அமர்நாத் குகைக்கு நடைபயணம் மேற்கொள்ள பட்டது.

தற்போது சந்தன் வாடி வரை வண்டிகளின் பயணம் விரிவு படுத்த பட்டுள்ளது. ஆனால் சிரி நகர் பொது பேரூந்துகள் பாகல் காவ் வரைதான் செல்லும் வசதி குறைந்த பக்தர்கள் இங்கிருந்தே இன்றும் நடை பயணம் மேற்கொள்வர்.



பாகல் காவ் இறங்கியவுடன் நம்மை வரவேற்ப்பது ஈரமான சூழல் தான். ஆம் வருன பகவான் நம்மை எப்பொழுதும் வரவேற்க்க தயாராக இருப்பான் போலும் இறங்கிய உடனும் மழைநீர் சொரிந்து வரவேற்பான். இல்லை என்றால் சிறிது இளைப்பாரவிட்டு மழை நீரில் நனைத்து விடுவான்.

இங்கு நாம் இறங்கியவுடன் நம்மை சூழ்ந்து கொள்பவர்கள். டோலி தூக்குபவர்கள்(பல்லக்கு) கோவேறு கழுதை உரிமையாளர்கள். ஆம் இவர்கள் தாம் பயணத்தில் நமது உறவுகள்.உங்களால் நடக்க முடியுமென்றால் இவர்களின்

அன்பான விண்ணப்பங்களை தவிர்த்து விடலாம்.





இவர்கள் ஊடாக சில ஏமாற்று பேர்வழிகளும் உண்டு. கவணம் தேவை

பாகல் காவில் உள்ள கூடாரங்கள் அனைத்து வசதிகளும் கொண்டவை காலை கடன் மற்றும் குளியல் முடிந்தவுடன் அதிகாலை உணவான தடிமனான இருப்பினும் மிகவும் மிருதுவான குழந்தைகளும் சப்பிடும் அளவிற்க்கு மிருதுவான சுட்ட‌ ரொட்டி கூடவே நாட்டு கொண்டைகடலை,உழுந்து குருமாக்கள். 15 முதல் இருபது ரொட்டிக்கள் சாப்பிட்டாலும் நமக்கு மனம் கொள்ளாது ஆனால் வயிற்றில் தான் இடம் வேண்டும்  இவை இலவசமாக கிடைக்கும்

பூரி உருளைக்கிழங்கு குருமாக்களும் உண்டு இவை குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும் கால்கள் எப்பொழுதும் ஈரநிலத்தில் இருக்கவேண்டிய சூழல் ஆதலாம் யாத்திரை செல்பவர்கள். உலர் துண்டுகள்(பேப்பர் டவல்) பேப்பர் நாப்கின் போன்றவற்றை நிறைய எடுத்து செல்ல வேண்டும்.

வழியில் ஓய்வெடுக்கும் போது பாறைகளில் அமர்ந்து பாடங்களை உலர வைத்து கொள்ள உதவும். முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள்மினரல் வாட்டர் பாட்டில்களை எடுத்து செல்வதை தவிருங்கள். குகைப்பாதையின் சுற்றுபுறத்தை காக்கும் கடமை நமக்குண்டு.
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான ஓடை நீர் இருக்க நமக்கு ஏன் மினரல் வாட்டர்??

குழுவின‌ரின் முன்பு சாமியார்க‌ள் ச‌ங்கு ஊத‌ ந‌ம‌து ப‌ய‌ண‌ம் புற‌ப்ப‌டுகிற‌து. "ஹ‌ர் ஹ‌ர் ம‌ஹா தேவ்" "ஜ‌ய் போலே நாத்" "ப‌ம் ப‌ம் போலெ" "போலேநாத்கி ஜெய்" என‌ ப‌ல‌ கோச‌ங்க‌ளுட‌ன் ப‌ய‌ண‌ம் புற‌ப்ப‌டுகிற‌து.
 
சிறிது துரம் ஆங்காங்கே அமர்ந்திருக்கும் வியாபாரிகள் தூரம் செல்ல செல்ல காணாமல் போய்விடுவார்கள். இனி நமக்கு கண்ணில் படுவது பனி மூடிய சிகர‌மும் பசுமை விரித்த பள்ளத்தாக்குகளும் தூரத்தில் மேயும் ஆட்டு கூட்டங்களும் வழியில் பாதுபாப்பு படையினரின் கூடாரங்களும் தான்.

மற்றவை நம்முடன் வரும் பக்தர்களின் நமச்சிவாய நாமம் தான்

மதியம் வெயிலிள்ளாமல் மேகமூட்டம் தான் அதிகம் காணபட்டாலும் பயணம் தடையில்லாமல் சென்று கொண்டிருக்கும் அதிக நேரம் யாரையும்  வெட்ட வெளியில் பாதுகாப்பு படையினர் திரிய விடுவதில்லை.

ஆங்காங்கே வழியில் கற்கலால் ஆன விடுகளைபோல் மேடான பகுதியை காணலாம். அதன் மீது துணிகளால் ஆன தோரனகொடிகள் வீசிக்கொண்டிருக்கும்.

இவை கோவில்கள் அல்ல அந்த பகுதியில் இறந்து போனவர்களின் கல்லரைகள். அவர்களில் உறவினர்கள் அங்கு வந்து அதிக மக்கள் புழக்க மிகுந்த யாத்திரை சமயங்களில் அவர்களுக்கு படையல் படைத்து விட்டு சென்று விடுவார்கள். அங்கு ஊதுபத்தி மற்றும் பூசை சாமாண்கள் இருப்பதை பார்த்து விட்டு விபரம் தெரியா பக்தயாத்திரிகளும் சேர்ந்து கல்லரைகளை ஏதோ கோவில் என நினைத்து பூசை செய்ய அவர்களுடன் வருபவர்களும் இதை தொடர்ந்து செய்ய விபரம் தெரிந்தவர்கள் நகைப்புடன் நகர்ந்து செல்வர்.

என்ன இருந்தாலும் உள்ளூர் வாசிகளின் கல்லரை அல்லவா இவர்களின் ஆண்மாவும் நமது பயனத்திற்கு துணை நிற்கும் என நினைத்து கொள்பவர்களும் உண்டு.
சரியாக மாலை நெருங்கும் வேளை திடீரென மக்கள் பெருந்திராளாக கூடுவர். என்னடா இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வந்தது என்றால் அவர்களும் பக்தர்கள் தான் ஆம் நாம் அடைந்த இடம் சந்தன்வாடி.

இரண்டாம் நிலை தங்குமிடம். இது ஒரு சிற்றூரும் கூட இந்த ஊரின் வருமானமே பக்தர்களில் 45 நாள் யாத்திரையின் போது தான்மற்ற நாட்களில் மலை விவசாயமும்ஆடு மேய்க்கும் தொழிலாளர்களின் வருமாணம் தான். இங்கு மலைபகுதியில் இயற்கையிலேயே கிடைக்கும் லிங்கம் போன்ற கூழாங்கற்கள் கிடைக்கும். 50 ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை டில்லியில் லாலாக்களின் கடைகளின் இந்த லிங்கம் பூசைஅறையில் இருப்பதை நாம் காணலாம்.

இங்கு ஹரியாண பஞ்சாப் எல்லை பகுதியில் அமைந்த ஒரு சிறு கிராமான ஹர்வா என்ற கிராம மக்கள் வருடம் தோரும்  இங்கு வந்து பக்தர்களுக்கு சேவை செய்வர்.
இவர்களிடம் யாத்திரிகளுக்கு தேவையான லங்கர்( சாப்பாடு உட்பட அனைத்து வசதிகளும் உண்டு எல்லாம் இலவசம்) தெரிந்தவர்கள் இவைகளை பெற்று பயனைடைவர் தெரியாதவர்கள் அங்கு இருக்கும் கடைகளில் செலவு செய்து பொருட்களை பெற்று கொள்வர்.

முக்கியமாக குழந்தைகளுக்கான உள்ளாடைகள்(குழந்தைகளுக்கு மட்டும்) பருத்தியாலான ஆடைகள் இலவசமாக கிடைக்கும். பிரஸ்டீஸ் பார்க்காமல் அரை டசன் வாங்கி வைத்து கொள்ளவேண்டும். மலை மேலே இது நமது குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படும். இங்கிருந்து இலவசமாக பெற்று பாதைகளின் ஓரங்களில் விற்பவர்களும் உண்டு. அவர்களிடம் வாங்க வேண்டாம்.

மேலும் இக்கட்டான சூழ்நிலையில் பிறகுக்கு எப்படி உதவ வேண்டும் என்று இந்த சந்தன் வாடி மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டும்.

கம்பளி ஆடைகள் வியாபாரிகள் இங்கு அதிகம் பார்க்கலாம். ஆடைவாங்க நம்மிடம் பணமில்லையா பரவாயில்லை இவர்கள் நமக்கு கொடுத்து விடுவர். நாம் ஊருக்கு வந்ததும் அதற்கு தகுந்த பணத்தை மணியார்டரில் அனுப்பி கொள்ளாலம்.

மேலும் குடி மக்களுக்கு இங்கு ஓர் நல்ல செய்தி உண்டு. சில குதிரை வாலாக்களிடம் நாட்டு சாராயம்,மற்றும் இராணுவத்தினரிடமிருந்து வாங்கிய மதுக்கள் கிடைக்கும். இளைஞர்கள் கூட்டம் இதற்காகவே இவர்களை தேடி அலையும்( அசதி தெரியாமலிருக்க என்று கூறிக்கொள்பவர்கள் உண்டு)

ஆனால் பக்தர்களாய் படியளக்கும் பரமனை வேண்டி செல்பவர்கள் இதை தவிர்க்கலாம்.

சந்தன் வாடி சுமார் 9500 அடி உயரத்தில் உள்ளது. இவ்வளவு உயரத்தில் புகைபிடிப்பவர்களுக்கு நெஞ்சேரிச்சல் புளித்த ஏப்பம் மற்றும் சில உபாதைகள் வர வாய்ப்புண்டு ஆகவே புகைபிடிப்பதை முற்றிலுமே தவிர்த்து விடுவது நல்லது. நாம் முற்றிலும் மறந்து விட ஒரு வாய்ப்பாகவே இதை கருதலாம். நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது.

வாழ்நாளில் ஏசி மற்றும் விலையுயர்ந்த படுக்கையில் இருந்தும் கூட வராத தூக்கம் சந்தன் வாடி கூடாரத்தில் வரும். ஆம் கரடு முரடான அடித்தளம்.
அதற்கு மேல் கோதுமை உமியிலான சாக்குஅதற்க்கு மேல் கம்பளி விரிப்புபோர்த்திக்கொள்ள ரஜோய்( மேத்தை போன்ற கொஞ்சம் மெல்லிய போர்வை) தூக்கம் வராமலா இருக்கும்.

வயிறு முட்ட சாப்பாடு குடும்பம் குழந்தை உறவு வியாபாரம் பணிபோன்ற தொல்லைகள் இல்லை. மனம் முழுவதும் இறை மயம் அவனே எல்லாம் காக்கும் போது நமக்கேதற்கு கவலை. மேலும் மெபைல் சினுங்கள் ஏதுமில்லை இங்கும் டவர் வைக்கும் பணி நடக்கிறதாம். வரும் காலங்களில் மொபைல் தொல்லை வரும்.


 இங்கு அதிகாலையில் ஆட்டு பால் கிடைக்கும் ஆம் மந்தை மக்கள் நமது கூடாரத்திற்க்கு வந்தே நமக்கு முன்பு ஆட்டு மடியில் இருந்து பாலை கரந்து கொடுப்பர். இளஞ்சூடாக மிதமான இனிப்பான பால் சூடு பன்ன தேவை இல்லை அப்படியே குடிக்கலாம். ( மருத்துவத்தின் மீது நம்பிக்கை உடையாவர்கள் பாக்டீரியாமலேரியாநிமொனியா என்று பயப்படுபவர்கள் நன்றாக சூடு செய்து குடிக்கவும் ஆனால் நாம் எதிர்பார்த்த சுவை இருக்காது). 

அங்கிருந்து மூன்று கிமீ தூரம் நடந்தால் வருவது பிச்சு டோப்இது தேளின் கொடுக்கு போல் வளைந்த மலைப்பாதை எனவே இதற்கு இந்த பெயர் வந்தது. இங்கும் சிறிய கேம்ப் உண்டு இளைப்பாறிவிட்டு மேலும் பயணித்தால் சேஸ்பால் என்னும் கேம்ப் வரும் அதன் பிறகு இந்த கேம்ப் அமைந்துள்ள பகுதி



இயற்கை நீறூற்று அதிகம் உண்டு.


கால்களை சில்லிட வைக்கும் நீரோடைகளின் அனுபவம் புதிதாய் செல்பவர்களுக்கு இன்பமான ஒரு அனுபவம்( அழகர் கோவில் செல்லும் நடைபாதையில் மழைக்காலங்களில் வழிந்து வரும் நீரோடை போல்)

அடுத்து வருவது நககோடி (கேம்ப் களின் பெயர்களில் உச்சரிப்புகளில் மாற்றம் வரலாம் தமிழில் எழிதாய் படிப்பதற்கேற்ப மாற்றி உள்ளேன்)

இங்கு ஒரு சிறிய அனுமார் கோவில் உள்ளது. பனிக்கரடி போல் இவரது வாழ்க்கை போலும் ஆம் பக்தர்களின் கூட்டம் ஓயும் வரை இவருக்கு மவுசு அதன் பிறகு மீளாத்துயிலில் மூழ்கிவிடுவார்.

இவர் இராணுவ வீரர்களுக்கு பிடித்த சாமி ஆமாம் இங்கு கிருஸ்தவஇஸ்லாமியபௌத்த என அனைத்து மத இராணுவ வீரர்களும் இவருக்கு விரைப்பான சல்யூட் அடித்து விட்டு பணி ஆரம்பிப்பார்கள்.

அங்கிருந்து சிலமணி நேர பயணத்திற்கு பிறகு நாம் அடைவது மலைகிராமான சேஸ்ஷ்நாகிங்கிருந்து அடுத்த பயணம் நடக்க ஆரம்பிக்க நாம் ஆரம்பத்தில் பார்த்த டோலிகாரர்களில் ஊர் என்றும் சொல்வார்கள் ஆனால் இன்று ஜம்முவின் பல பகுதிகளில் வாழும் மக்க‌ள் வருமானத்திற்காக இந்த தொழிலில் வந்து விட்டனர்.



அடுத்த பயணம் ஆரம்பம் தீவிரவாதிகள் எந்த சிகரத்தில் இருந்து சுடுவார்கள் என்று தெரியாத சூழல்நெடுமலை பயணம் இன்னும் தூரம் செல்ல வேண்டும் என்ற மலைப்பு வேறு என நடை பயணம் சிறிது இறுக்கமாக தெரிந்தாலும் சர்வேஸ்வரனை மனதில் கொண்டு நடைபயனிக்கும் போது பயமெல்லாம் சூரியன் கண்ட பனி போல் விலகி ஓடிவிடுகிறது.

குழுக்களாக செல்லுங்கள் என வழியெங்கும் இராணுவ வீரர்கள் அறிவுருத்தியும் சில இளவட்டங்கள் துணிச்சலாக‌ நீரொடைகளில் தண்ணீர் பிடிக்க செல்கிறேன் என சென்று விட்டு திரும்பி வராமல் போய்விடுவார்கள். ஒன்று பாதை மறந்து விடுவது. காரணம்! அனைத்து மலை சிகரங்களும் ஒன்று போல் தெரிவது

மற்றோன்று காட்டு விலங்குகள். அதைவிட தீவிரவாதிகள். ஆகவே மனதில் கொள்ளவேண்டும் அனைவரும் ஒன்று பட்டே பயணிக்க வேண்டும்.

அடுத்து நாம் அடைவது வார்பல் எனப்படும் செயற்கை கேம்ப்இங்கும் சிறிந்து இளைப்பாறிவிட்டு நமது பயணம் தொடரும். நமக்கு கண்முன் தெரிவதெல்லாம் மலை உச்சியில் தூர எறும்பு போல் சாரை சாரையாய் ஊர்ந்து செல்லும் மணித கூட்டம். நாமும் அங்குதான் செல்லவேண்டும் என்ற மலைப்பும் ஆவலும் கடந்து நமது நடை பயணத்தை வேகபடுத்துகிறது.


பல கிலோமீட்டர் இதமான சூழலில் நாம் அனைவருடனும் கலந்து செல்ல செல்ல மலை உச்சியில் ஏறிய களைப்பே இல்லாமல் போய்விடுகிறது. ஆம் நீங்கள் கடல் மட்டத்தில் இருந்து 14500 மீட்டர் உயரத்தில் இருக்கிறீர்கள் என்ற அறிவிப்பை பார்த்ததும். உலகத்தின் உச்சியில் இருப்பதை போன்ற ஒரு மலைப்பு நமக்கு நமக்கும் உச்சியில் ஒருவன் இருக்கிறான் என்ற தவிப்பும் ஒருபக்கம். அவனை கான த்தானே இந்த பயனம்.

மேகாகன் ஸ்டாப் என்ற கேம்ப் இந்த மலை உச்சியில் உண்டு இங்கு முதலுதவிக்கான அனைத்து உபகரணங்களும் இரானுவ மருத்துவர்களும்,செவிலியர்களும் உண்டு.

குணசேகரன் என்ற இராணுவ மருத்துவர் நாகர்கோவில்காரர் அந்த ஏங்கோ ஒரு தூரத்தில் உள்ள மலை வாழிடத்தில் சேரலத்து தமிழை கேட்டு புல்லரித்து போய்விட்டோம்.


சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரலான் நாட்டிளம் பெண்களுடனே என்ற பாரதியின் பாடல் நினைவிற்க்கு வருகிறது. ஆம் செவிலியர்கள் பலர் சேரலநாட்டினர்
(மலையாளிகள்)

இங்கு உணவு உட்கொண்ட பின் நமது பயணம் தொடர்கிறது.


அடுத்து நாம் அடையும் இடம் பபிபால்(பாவ விமோசனமையம் ஆம் இது மலையின் உச்சி சிகரம்.இங்கு நமது கொடியை ஊன்றலாம் ஆம் இதுவும் ஒரு சிகரம் தானே.
இவ்வளவு உயரத்தில் மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள்தோன்றலாம் மருத்துவ குழு இங்கு உள்ளது அவர்களிடம்வேண்டிய பிகாம்பளக்ஸ் மாத்திரைகள் கிடைக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டால் ஈறுகளில் இரத்தம் வடியும் தொல்லை வராது.

இங்கிருந்து இறக்கம் ஆம்சுமார் ஆறுகிலோ மீட்டர் தூரம் நாம் செல்லும் பாதை நமக்கு எளிதாக தெரிகிறது திரும்பி பார்த்தால் மறுபுரம் நாம் வந்த பாதையும் தெரியும் கொஞ்சம் மலைத்து விட்டு விறுவிறு என  இறங்க வேண்டியது தான் வந்த பாதையிலேயே அழகான பாதையிது.

ஆம் பசும் போர்த்திய அழகிய பாதை செறுப்பேதேவையில்லை எனலாம் அந்த அளவு அழகானது.சில செறுப்புகளை கைகளிலெடுத்து கொண்டு நடப்பது தெரிகிறது. மனதில் துணிச்சல் இருந்தால் நீங்களும் செறுபின்றி நடக்கலாம்.

வழியில் பல ஒற்றையடிப்பாதைகள் வரும் சிலர் சித்தர்கள் முனிகள் வந்த பாதை என்று கதை விடுவார்கள். அதெல்லாம் இல்லை இது நாங்கள் தினமும் வரும் பாதை என தூரத்தில் மேயும் ஆடுகள் உறுதி படுத்தும். இந்த இறக்கத்தில் பனி எருதுகள் திபெத்திய கழுதைகள் சில நேரங்களில் மான்கள் என நமக்கு காட்சி தரும். காமிராவை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

பற்கள் நமது உறுதியையும் மீறி தாளமிடுகிறது குளிரில் வேகமாக நடக்கும் போது கிடைக்கும் உடல் சூட்டையும் மீறி நம்மை உலுக்கும் குளிர் இறங்கும் பாதையாதலால் நாம் விரைவாக பஞ்தரனி என்ற கேம்பை அடையலாம். இங்கும் சந்தன் வாடியில் கண்டசனத்தொகை போல் மக்கள் வெள்ளம்.

இங்கு போஸ்ட் ஆபீஸும் உண்டு கையில் பென்சில் பேனா பேப்பர் கொண்டு வந்தால் இந்த காட்சிகளை எழுதி நமது ஊருக்கு அனுப்பலாம் நாம் திரும்புவதற்குள் அவை போய் சேர்ந்திருக்கும்.

இங்கு தங்கி தூங்கி எழுந்த பின் அடுத்து நாம் வருவது சங்கம்( கூடுமிடம்) என்னும் ஊர் ஆம் படால் என்னும் வேறு பகுதியில் இருந்து வந்தவர்களும் பாகல் காவிலிருந்து வந்தவர்களும் இங்கு கூடுவர்.

இங்கு சந்தைகாடான இரைச்சல் குகைடிரஸ்டால் அமைக்க பட்ட சிறப்பு கேம்ப் இங்குள்ளது.

இங்கிருந்து கிளம்பிய பிறகு நாம் இன்னும் இரண்டு மணிநேரம் தான் லிங்கேஸ்வரனை அடைந்து விடலாம் என்ற டோலிகளின் பேச்சு நமக்கு காதுகளில் இனிமையான செய்தியாகும்.




லிங்கேஸ்வரனை காண நெருங்க நெருங்க வந்த களைப்பு போய் ஆர்வம் தான் மிகுகிறது. தூரத்தில் எறும்பு போல் மனித கூட்டம் ஊறும் காட்சி தூர மலை சாரலில் ஒரு சிறு குகைபோல் தெரியும் ஒரு ஓட்டைக்குள் எல்லாம் சென்று திரும்பும் காட்சி அதுதாம் குகை என்றதுஇங்கிருந்தே பக்தர்களின் காரகோசம் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது.

பழனி செல்லும் போது ஓட்டன் சத்திரத்தை தாண்டியது தெரியும் பழனிமலை வாசனின் ஓம் என்னும் எழில் எழுத்தை கண்டது அரோகாரா என தன்னை அறியாமல் வரும் வார்த்தையை போல்

வரிசை நகர நகர குகை நமக்கு பிரம்மாண்டமாய் தெரிய ஆரம்பிக்கிறது. ஆம் சில மணி நேரத்திற்கு முன் பார்த்த சிறு குகை அண்டத்தியே விழுங்கிவிடும் பேரண்டமாய் தெரிகிறது “.


இதோ நாம் நெருங்கி விட்டோம்  இதோ நாம் நுழைந்து விட்டோம் குகைவாயிலில் அங்கே பக்தர்களுக்கு அதிகம் உதவுபவர்கள் பூசாரிகளோ,பண்டிதர்களோ இல்லைஆம் இங்கே நாமே இறையானை ஆராதிக்கலாம்.

மனம் குளிர தரிசிக்கலாம். இராணுவ வீரர்கள் நம்மை அமைதியாக செல்லும்படியும் முன்னால் இருப்பவர்களை தொந்திரவு செய்யாமல் அவர்கள் தரிசனம் செய்யும் வரை காத்திருந்து நீங்கள் தரிசனம் செய்யுங்கள் என்று அன்பான கட்டளை யிட்டு கொண்டிருக்க முன்னோர் விலகியதும்.

நமக்கு சுயரூபம் காட்டும் கயிலையோன்.

ஆம் நம்மால் கண்ணீரை அடக்க முடியவில்லை,உடல் நடுங்குகிறது. ஆம் அண்டத்தை அரசாளும் நீலகண்டன் அங்கேஅணுவிலும் அணுவாக அல்ப பிண்டமாய் நாம் அவன் முன்னே.



இங்கே ச‌ல‌க‌ண்டி சொல்லி யாருமில்லை,ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழிவிட்டு ஒரு ஓர‌த்தில் நின்று நாள் முழுவ‌தும் அவ‌னை பார்த்து கொண்டிருக்க‌லாம். ஆம் இத‌ற்க்காக‌த்தானே இத்த‌னை இன்ன‌ல்க‌ள்நொடிய‌ குளிர் ம‌லைப்ப‌ய‌ண‌ம்.

இங்கே வி ஐ பி வ‌ரிசை இல்லைஆம் இவ்வ‌ள‌வு இன்ன‌ல்க‌ளை க‌ட‌ந்து இவ‌னை காண‌வ‌ந்த‌ நாமே சிவ‌ணுக்கு வி வி ஐ பிஇங்கு யார் பெரிய‌வ‌ன் என்ற‌ போட்டி வைத்தால் உண்மையில் ந‌ம் முன் அமைதியாக‌ வெண்ப‌னி திட்ப‌த்தில் ஒளிர்ந்திருக்கும் இறையோன் பெரியோன் அல்ல‌ அப்ப‌டி யெனில்

ஔவை த‌ன‌து வாக்கில் சொல்வார்

பெரிய‌து புவ‌ண‌ம்புவ‌ண‌ம் பிர‌ம்மாவின் ப‌டைப்பு,
பிர‌ம்ம‌னோ திருமாளின் தொப்புளில் பிற‌ந்த‌வ‌ன்,
திருமாளோ பாற்க‌ட‌லில் துயில்ப‌வ‌ன்,

பாற‌க‌ட‌லை ஒத்த‌ அனைத்துகடலும்
அகத்தியனின்  கையில் அட‌க்க‌ம்

அந்த‌ சிறு முனியோ சிறிய‌ க‌ல‌ச‌த்தில் பிற‌ந்த‌வ‌ன்,
க‌ல‌ச‌ம் இந்த‌ பூமியின் சிறு ம‌ண் குவிய‌ல்

இந்த‌ பூமியோ ஆதிசேச‌னின் ஒருத‌லையின் சிறு பாக‌ம்,

ஆதிசேனோ உமைய‌வ‌ளின் சிறுவிர‌ல் மோதிர‌ம்

உமைய‌வ‌ளோ அப்ப‌னின் உட‌லில் ஒரு பாதி ஒருங்கியவள்

என் அப்ப‌னோ தொண்ட‌னில் உள்ள‌த்தில் அட‌ங்குப‌வ‌ன் ”

இந்த‌ கூற்றுத்தான் இன்றுவ‌ரை இறைவ‌னை நோக்கி ம‌னித‌னை அழைக்கிற‌து. ம‌னித‌னும் த‌ன்னிலை உண‌ர்ந்து இறைமைதான் பெரிதென்று உண‌ர்கிறான்.

அப்ப‌டி அனைவ‌ரும் உண‌ரும் போது உல‌கில் அமைதி நில‌வும்இந்த‌ இடைக்கால‌த்தில் ம‌னித‌பேத‌ம் பார்க்கும் ம‌னித‌ர்க‌ள்நான் தாம் பெரிய‌வ‌ர் என‌ இறுமாப்பு கொள்ப‌வ‌ர்க‌ள்அனைத்தும் என‌க்கே என‌ உரிமை கொள்ப‌வ‌ர்க‌ள்ப‌லாசாலி என‌ ப‌றை சாற்றுப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் கால‌ச்சூழ‌லில் காணாம‌ல் போய்விடுவ‌ர். உல‌கில் தோன்றிய‌ ம‌த‌ங்க‌ள்ம‌த‌ போத‌க‌ர்க‌ள் ந‌ம‌க்கு அறிவுருத்துவ‌தும் இதைத்தான் உண‌க்கு மேல் ஒன்று உண்டு அதை க‌வ‌ண‌த்தில் உண‌க்கு கிடைத்த‌ இம் ம‌னித‌ பிற‌ப்பை பிற‌ருக்கு உத‌வ‌ குறிக்கோள் கொண்டிரு.

அம‌ர்நாத் இந்துக்க‌ளுக்கு ம‌ட்டும் சொந்த‌ம் என‌ என்ன‌ வேண்டாம். புராண‌ங்க‌ளில் அம‌ர‌ த‌த்துவ‌த்தை உமைய‌வ‌ளுக்கு அளித்த‌ இட‌ம் என்று எழுதியிருந்தாலும் இந்த‌ குகை 16 ஆம்,

                 நூற்றாண்டில் க‌ண்ட‌றிய‌ பட்ட‌து.

“:இஸ்லாமிய‌  குடும்ப‌த்தை சேர்ந்த‌ ஒருவ‌ர் ம‌லையில் ஆட்டு கூட்டத்தை மேய்த்து கொண்டு செல்லும் போது பாதை த‌வ‌றிவிட்டார். தூர‌த்தில் தென்ப‌ட்ட‌ இந்த‌ ம‌லைக்குகைக்குள் நுழைந்த‌ போது வெண்ணிற‌ ஆடை அனிந்த‌ துற‌வி ஒருவ‌ர். இவ‌ருக்கு மீண்டும் ஊருக்கு திரும்ப‌ வ‌ழி காட்டிய‌ தாக‌வும்அத‌ன் பிற‌கு அந்த‌ இஸ்லாமிய‌ர் வாழ்வில் எல்லா வ‌ள‌மும் பெற்று வாழ்ந்த‌ தாக‌வும் குறிப்பு உள்ள‌து. மேலும் அந்த‌ இஸ்லாமிய‌ குடும்ப‌த்தின் ப‌ர‌ம்ப‌ரை தான் இன்றும் அந்த‌ குகையை நிர்வாகித்து வ‌ருகிற‌து.



குகைக்கு வ‌ரும் 100 ப‌க்த‌ர்க‌ளில் 30 பேர் இஸ்லாமிய‌ர்க‌ள்இவ‌ர்க‌ளும் லிங்க‌ நாத‌ரை த‌ரிச‌ன‌ம் செய்கின்ற‌ன‌ர். ஆம் இவ‌ர்க‌ள் லிங்க‌ நாத‌னுக்கு வைத்த‌ பெய‌ர் ப‌ர‌ப்பானி பாபா(ப‌னிக‌ட்டி பாபா)

மேலும்ப‌க்த‌ர்க‌ளுக்கு ம‌லை ஏற்ற‌ துவ‌க்க‌த்தில் இருந்து மீண்டும் இற‌ங்கும் வ‌ரை ந‌ம‌க்கு ந‌ல் உற‌வாக‌ இருந்து உத‌வுவ‌தும் இஸ்லாமிய‌ர்க‌ள் தான். இப்ப‌டி ம‌த‌ ந‌ல்லின‌க்க‌த்திற்காக‌வும் ஒரு பால‌மாக‌ இருக்கும் அம‌ர்நாத் யாத்திரைக்கு ம‌த‌ ந‌ம்பிக்கை இல்லேதோரும்இய‌ற்கை இர‌சிக்கும் ஒரு சுற்றுலாவாக‌ கொண்டு கிள‌ம்ப‌லா

0 comments:

Post a Comment

funny

ngobikannan

ngobikannan

ngobikannan