Pages


running letters

drums sivam

mGinger

Sunday, 14 August 2011

செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்


சென்னை:
செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு கூறியிருப்பதாவது, `` அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலவச மடிகணினி வழங்கும் திட்டம் மாணவர்களுக்கு பயன்படும் திட்டம் என்பதால் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் அமல் செய்யப்படும் படிப்படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்,
அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிகணினி வழங்கப்படும். 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடி கணினி வழங்கப்படும்"என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

funny

ngobikannan

ngobikannan

ngobikannan