மதுரை திருமலைநாயக்கர் மகாலில் சூட்டிங் நடத்த தடை
மதுரை திருமலைநாயக்கர் மகாலில் சினிமா சூட்டிங் நடத்த இடைக்கால தடைவிதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் நகரான மதுரைக்கு பல்வேறு சிறப்புகள் ஒன்று. அவற்றுள் மதுரை திருமலைநாயக்கர் மகாலும் ஒன்று.
மன்னர் திருமலைநாயக்கரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ஆண்டுகள் பல கடந்து இன்றும் அதன்பெருமையை பறைசாற்றி வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தொடர்ந்து இங்கு நடந்து வரும் சினிமா சூட்டிங் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் மகால் பொலிவிழந்து காணப்படுகிறது.
இதனை எதிர்த்து மதுரை அண்ணாநகரை சேர்ந்த, முத்துக்குமார் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (11.08.11) நடந்தது. இதில் மகாலில் சினிமா சூட்டிங்கை நடத்த தற்காலிக தடைவிதிப்பதாகவும், மேற்கொண்டு மகாலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment