தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றில் சதுரகிரி பற்றி அதிக அளவு பேசப்பட, தற்போது அந்த மலை நோக்கி சென்னை உட்பட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூட்டம். முன்பெல்லாம் அமாவாசைக்கும், பவுர்ணமிக்கும் தான் கூட்டம் இருக்கும். அதைவிட ஆடி அமாவாசைக்கு லட்ச கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
தற்போது வாரத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்கள் வருவதாக சொல்கிறார்கள். சதுரகிரி எப்படியிருக்கிறது? அறிந்து வர சதுரகிரிக்கு ஒரு சிறப்புப் பயணம் மேற்கொண்டோம்
தென்காசி குற்றால சாலையிலிருந்து சதுரகிரி செல்லும் பாதை அழகாபுரி சாலை பிரிவு என்ற இடத்தில் பிரிகிறது. மதுரையில் இருந்து பேருந்தில் பயணித்தால் சுமார் ஒன்றரை மணி நேர பயணம்.
தென்காசி குற்றால சாலையிலிருந்து சதுரகிரி செல்லும் பாதை அழகாபுரி சாலை பிரிவு என்ற இடத்தில் பிரிகிறது. மதுரையில் இருந்து பேருந்தில் பயணித்தால் சுமார் ஒன்றரை மணி நேர பயணம்.
சித்தர்களின் உறைவிடமான சதுரகிரி மலையின் அமைதி கலந்த அழகு தாணிப்பாறை என்ற இடத்தில் வரவேற்கிறது.பால் குடிக்கும் குழந்தைகளை தோளில் சுமந்தவர்களும், 'போனால் சதுரகிரியில் உயிர் போகட்டும். மோட்சம் நிச்சயம்' என்று குடுகுடு வயதிலுள்ள தாத்தா, பாட்டிகள் உள்பட பலரும் அடிவாரத்திலிருந்து மலைக்கு ஏற தயாராக இருந்தார்கள். நாங்கள் சென்ற, அன்றைக்கு பிரதோஷம் வேறு. முண்டியடிக்கும் கூட்டம். மலை மீது நடக்க தொடங்கி விட்டால் மேலே நிமிர்ந்து பார்க்க கூடாது.அண்ணாந்து மலையை பார்த்தால் வந்த வழியே திரும்பி விட வேண்டியது தான்.
ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்களில் பலர் இரவு முழுவதும் மலையில் நடந்து கோவிலை அடைவதுண்டு. ஆனால், இரவில் மலையில் நடந்து பழக்கம் இல்லாதவர்கள் கண்டிப்பாக யார் சொல்வதை கேட்டும் இரவில் மலை ஏற முயற்சிக்க கூடாது.
மலை ஏற வருபவர்கள் அனைவரும் வைராக்கியத்தை மனதில் மட்டும் அல்லாமல் உடம்பு முழுவதும் சுமந்து கொண்டு வந்தால் தான் முதல் அடி எடுத்து வைத்த பிறகு இடையில் உடம்பு எப்படி வலித்தாலும், அதை எல்லாம் ஒரங்கட்டி வைத்து விட்டு மலை உச்சியை அடைய முடியும். செங்குத்தான மலை ஏற்றம், தப்பித்தவறி கால் வழுகினால் அதலபாதாளம் நிச்சயம். செங்குத்தான மலையின் மீது கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூர பயணம். வழி நெடுகிலும் பாறைகளில் இருந்து சிதைந்த கற்குவியல்களின் சிதறல்.
கல்லும்முள்ளும் காலுக்கு மெத்தை என்று சபரி மலைக்கு பாடல் பாடப்பட்டிருந்தாலும் உண்மையில் இந்த பாடல் வரிகள் சதுரகிரிக்கு தான் பொருத்தம். காலை வைத்தால் நறுக்கென்று காலை பதம் பார்க்கும் இந்த கற்கள் ஒரு ரணகளமாக இருக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை என்று சொல்லலாம். இந்த கற்கள் காலின் உள்பாகத்தில் குத்தும் போது அங்கிருந்து ரத்தம் நுனி வரை வந்து எப்போது வெளியே வரலாம் என்று துடிக்கும் படியான ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்துவது மட்டும் நிஜம்.
'முடிந்தால் என்னை வந்து மலை உச்சியில் பாரடா என்று மமதையுடன் அமர்ந்திருக்கும் சிவனின் திருக்கோலம்' நோக்கிய சுந்தர மகாலிங்க மலைக்கான தரிசன யாத்திரை பாதையில், மலையின் அடிவாரத்தில் சுண்டல் முதல் போளி, போண்டா, இட்லி,தோசை என்று எல்லாம் கமகமக்கிறது. இங்கு வந்து வாயை கட்டுப்படுத்தாத ஜீவன்கள் பிறகு மலை ஏறும் போது தான் அந்த அவஸ்தையை சந்திக்க நேரிடும். சிலர் மலை ஏற சத்து வேண்டும் என்பதற்காக இட்லி, போண்டா என்று முழுங்கி விட்டு போவதை பார்க்க முடிந்தது.
அவர்கள் கால் வாசி மலையை கூட தாண்டாத நிலையில் வழியிலேயே மலைப்பாம்பு போல் படுத்து 'செரிச்ச பின்னால ஏறிக்கலாம்' என்று சாய்ந்து விட்டதையும் பார்க்க முடிந்தது. விவரமான சிலர் தண்ணீர் பாட்டிலில் குளுக்கோன் "டி" யை வாங்கி கலந்து கொண்டு களைப்பு வரும்போது குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். ஜாக்கிஜான் போல் நினைத்து கொண்டு வரும் சிலர், அம்மா, அண்ணா குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாங்கன்ன ...என்று கெஞ்சுவதை சகஜமாக பார்க்கலாம்.
நாங்கள் உலர்ந்த நெல்லிவற்றலை கொண்டு போயிருந்தோம். இது வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இழக்கும் நீர்ச்சத்தை ஈடுகட்டியதுடன் வேகமாக மலைக்கு எங்களை கொண்டு போய் சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தது. மலை அடிவார தொடக்கத்திலேயே வழக்கமான ஏமாற்று வேலைகளும் தொடங்கி விடுகின்றன. சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா போடும் பக்தர்களின் பாக்கெடடுகளில் இருக்கும் நோட்டுகளையும், சில்லரைகளையும் குறிவைக்கும் கும்பலுக்கு அந்த மகாலிங்கத்தின் மதிப்பு எங்கு தெரியப்போகிறது?
அரோகரா கோஷம் போடும் இந்த வியாபாரிகள், நடந்து வரும் பக்தர்களை பயங்கர கரிசனத்துடன் 'சாமி நில்லுங்க, மகாலிங்கத்துக்கு விபூதி பாக்கெட் கொண்டு போங்க' என்று சொல்லியபடி நெற்றியில் விபூதியையும் பூசி விடுவார்கள். பக்தர் மெய்சிலிர்த்து நின்றவுடன் வியாபாரியின் பக்கத்தில் நிற்பவர், 'விபூதி பாக்கெட்டுக்கு 10 ரூவா குடுங்க சாமி' என்பார். இது முதல் சுரண்டல்.

தொடர்ந்து நடக்கும் போது களைப்பு மேலிடும். சிலர் வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் இந்த மலையில் ஏறும் போது அப்படி கொண்டு வந்த தண்ணீர் எல்லாம் பாதி வழிக்கும் முன்பே தீர்ந்து போய்விடும். இப்படித் தான் நடக்கும் என்பது வியாபாரிகளுக்கு தெரியாதா என்ன? ஆங்காங்கே சிலர் சாக்கு மூட்டைகளில் தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பார்கள். பாக்கெட் விலை 5 ரூபாய். வேறு வழியே இல்லை. தண்ணீர் இல்லாமல் ஏற முடியாது. வாங்கியே ஆகவேண்டும். ரஸ்னா என்ற பெயரில் ஜாக்கிரின் கலந்த தண்ணீரை விற்று காசு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இது இரண்டாவது சுரண்டல்.
இருந்தாலும் மலையில் ஏறும் பக்தர்களுக்காக சுந்தர மகாலிங்கத்தின் பலனை பெற நினைக்கும் சில புண்ணிய ஆத்மாக்கள் தங்கள் பெயரில் ஆங்காங்கே இலவசமாக தண்ணீர் பந்தல் வைத்து தண்ணீர் வழங்குகிறார்கள். முறுக்கு, உப்புக்கடலை,பட்டாணி போன்ற தீனிகள் வழி நெடுக ஆங்காங்கே கிடைக்கிறது. தயவு செய்து தண்ணீர் கைவசம் இல்லாமல் இவற்றை வாங்கி சாப்பிட்டால்....பிறகு சொல்ல வேண்டியது இல்லை. நாக்கும், தொண்டையும் உலர்ந்து மற்றவரிடம் ஓசி தண்ணீர் கூட கேட்க முடியாது.
கடும் வலியுடன் காலை அடிமேல் அடி வைத்து ஏறி செல்லும் வழியில் முதலில் வருவது பசுத்தடம் என்ற நிலை. காரம்பசுதடம் என்ற ஒரு இடமும் இருக்கிறது. இந்த இடத்திற்கு அடுத்ததாக வனதுர்க்கையம்மன் அருள்பாலிக்கிறார். இந்த அம்மனுக்கு தனிக்கோயில் இல்லை. ஒரு மரத்தடியில் சிலை மட்டும் இருக்கிறது. வரும் பக்தர்கள் அம்மனுக்கு விளக்கு போட்டு அருள் பெறுகிறார்கள்.
இதற்கடுத்து சுந்தர மகாலிங்கம் சன்னதியை நெருங்குவதற்கு சிறிது முன்னதாக பிலாவடி கருப்பு அருள்பாலிக்கிறார். சுந்தர மகாலிங்கமான சிவன் இந்த மலையில் தங்கி சிறப்பு பெறுவதற்கு காரணமே இந்த பிலாவடி கருப்பு தான். (அதாவது, பிலாவடி கருப்பு காவல் செயும் பசுக்களின் பாலை சிவன் தினமும் தெரியாமல் குடிக்க, ஒரு நேரம் கருப்பிடம் சிக்கி பிரம்படி பட்டு, பின்னர் பிலாவடி கருப்புக்கு தரிசனம் ஆகி சதுரகிரியில் சிறப்பு பெற்றதாக தலவரலாறு) இங்கு வரும் பக்தர்கள் சிலர் தங்களுடன் கொழுத்த ஆட்டுக்கிடாய்களை கொண்டு வருவதை காண முடியும். இந்த கிடாய்கள் எல்லாம் பிலாவடி கருப்புக்கு நேர்ந்து கொண்டு பலி கொடுக்கப் படுவதற்கான நேர்த்திக்கடன் கிடாய்கள் தான்.
பிலாவடி கருப்பு சன்னதியில் தரிசனம் செய்து விட்டு மலை ஏறினால் சிறிது தூரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் வருகிறது. கோயில் வரும் முன்பாக நரிக்குறவர்கள் தாயத்து மற்றும் சில பாசிகளை விற்கிறார்கள். இதை வாங்குவது உங்கள் நம்பிக்கையை பொறுத்தது. தேங்காய உடைக்க 2 ரூபாய் டிக்கெட்டுடன் பக்தர்கள் அர்ச்சனை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கோவிலின் பிரகாரத்தில் தாராளமாக அன்னதானம் நடக்கிறது. சுந்தர மகாலிங்கம் அன்னதான கூழ்(கம்பு) இங்கு பிரசித்தம். தொட்டுக்கொள்ள நாரத்தை ஊறுகாயுடன் பக்தர்களுக்கு எவ்வளவு கூழ் வேண்டுமென்றாலும் தருகிறார்கள்.
உண்மையிலேயே மலை உச்சி மீது ஏறிவந்து வெப்பத்தில் தகிக்கும் பக்தர்களின் வயிற்றை இந்த கூழ் குளுமைப்படுத்தி விடுகிறது. அப்படியே கோவிலுக்கு சென்றால் சாய்ந்த நிலையில் சுந்தரமகாலிங்கம் சுயம்புவாக காட்சி தந்து பக்தர்களை பரவசப்படுத்தி விடுகிறார். சுந்தரன் என்றால் அழகு என்று தமிழ் பொருள். உறுதியாக மற்ற இடங்களை விட இங்கு சாய்ந்து காட்சி தரும் சுந்தர மகாலிங்கம் அழகோ அழகான மகாலிங்கம் தான். இங்கு அவருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்ப்பட்டு பக்தர்களுக்கு திருநீறு அளிக்கப்படுகிறது.
திருப்பதி பெருமாளை வணங்குவது போல் 1 லிருந்து 20 நொடிகள் தான் இந்த சுந்தரமான லிங்கத்தை பக்தர்கள் காணமுடிகிறது. கூட்டம் நெக்கித்தள்ளும் நிலையில் இதற்கு மேல் வரிசையில் நின்று பார்ப்பது இயலாத காரியம். இருந்தாலும் இந்த லிங்க தரிசனம் உள்ளத்தில் நிறைவாக பதிந்து மலையில் ஏறி வந்த களைப்பை எல்லாம் மறந்து போகச் செய்து விடுகிறது.
கோவிலை விட்டு வெளியே வரும் பிரகாரத்தில் அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. சுந்தர மகாலிங்கத்தை தரிசித்து விட்டு அம்மனை வணங்கி செல்கிறார்கள் பக்தர்கள். அப்படியே அன்னதானம் கமகமக்கும் சாம்பாருடன் சூடாக பரிமாறப்படுகிறது. களைப்பெல்லாம் மறந்து சாப்பிட்டு விட்டு அப்படியே இங்குள்ள மரங்களின் கீழ் ஒய்வெடுத்தால் உண்மையிலேயே இப்படியும் ஒரு சுகம் உடலுக்கு இருக்குமா என்பது போன்ற பரவசம் கிடைப்பது உறுதி.
சுந்தர மகாலிங்கம் சன்னதிக்கு எதிர் மலையில் சந்தன மகாலிங்கம் உறைந்திருக்கிறார். இங்கு சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு சந்தனம் வழங்குகிறார்கள். இதற்கு முன்பாக சட்டநாத முனியின் குகை உள்ளது. இதனை தரிசித்து அப்படியே சந்தன மகாலிங்கத்தை தரிசிக்கலாம். கூடவே முருகன் சன்னதி, விநாயகர் சன்னதிகளும் உள்ளன. இவர்களை தரிசித்து விட்டு அப்படியே மீண்டும் மலையிலிருந்து கீழ் நோக்கி பயணிக்க வேண்டியது தான்.மலை மீது ஏற முடியாத வயதான மக்களுக்கு டோலி கட்டி தூக்கி செல்கிறார்கள். மேலே கொண்டு சென்று மீண்டும் இறக்க கூலி சுமார் மூன்று ஆயிரம்.
இங்கு சொன்னத விஷயங்கள் குறைவு தான். மலையின் மீது ஏறிப்பார்த்தால் மட்டுமே அதன் கடினமும், அழகன் சுந்தர மகாலிங்கத்தின் தரிசனம் தரும் மனநிம்மதியும் புரியும். நீங்களும் ஒரு முறையாவது சுந்தர மகாலிங்கத்தை தரிசியுங்கள்.
(குறிப்பு:வழிநெடுகிலும் பிச்சை போட வேண்டிய நிலையில் சாமியார்கள்,ஊனமுற்ற நபர்கள் ஏராளமாக இருப்பார்கள். சில்லறை காசுகளை மாற்றி எடுத்து சென்று இவர்களுக்கு கொடுத்து புண்ணியம் தேடுங்கள். தொப்பை பிரச்சனை இருக்கும் நபர்கள் ஆங்காங்கே ஓய்வு எடுத்து வருவது நல்லது. அந்த ஓய்வில் கிடைக்கும் இடத்தில படுக்க ஜமுக்காளம் கூடவே வைத்திருப்பது நல்லது.
0 comments:
Post a Comment