Pages


running letters

drums sivam

mGinger

Tuesday, 16 August 2011

ஊழல் ஒழிப்பில் உங்கள் பங்கென்ன? தினமலர் வாசகர்களே ஆதரவு கரம் கொடுப்பீர்

வல்லரசு என்ற வானளாவிய சிகரத்தை எட்டுவதற்கான நம் பயணத்தில், மாபெரும் தடைக்கல்லாய் எழுந்து நிற்கிறது ஊழல். கையூட்டு, லஞ்சம், ஊழல் என வெவ்வேறு வடிவங்களில் சுற்றிச் சுழன்று நம்மை வீழ்த்தும் இந்த காரணிகளிலிருந்து நம் தேசத்தைக் காக்க வேண்டிய மகத்தான கடமை, நமக்கிருக்கிறது. அதிலும் நம் தமிழகத்துக்கு இப்போது அந்தப் பொறுப்பு, ரொம்பவே அதிகரித்திருக்கிறது; அதற்காக ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி, காந்திய தொண்டர் அன்னா ஹசாரே டில்லியில் துவக்கியுள்ள அகிம்சைப் போராட்டத்துக்கு, தேசம் முழுவதும் ஆதரவு அலை பெருகி வருகிறது. தமிழகத்திலிருந்தும் ஹசாரேக்கு ஆதரவாக பல கோடி கரங்கள் நீள்கின்றன.
நாட்டையே தூய்மைப்படுத்தும் இந்த போராட்டத்தில் உங்கள் பங்‌கென்ன? தினமலர் வாசகர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதி புகைப்படத்துடன் அனுப்பினால் அதை வெளியிடத் தயாராக இருக்கி‌றோம். பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தை உங்கள் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். அது குறித்து எங்களுக்கு தெரிவியுங்கள். ஊழல் ஒழிப்பிற்கு நம்மால் இயன்ற கட‌மையைச் செய்வோம்.

0 comments:

Post a Comment

funny

ngobikannan

ngobikannan

ngobikannan